செய்திகள்

சென்டாக் முறைகேடு எதிரொலி: புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

Published On 2017-09-20 15:13 GMT   |   Update On 2017-09-20 15:13 GMT
சென்டாக் மருத்துவக் கவுன்சிலிங்கில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், இன்று புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் வீட்டில் சோதனை நடத்தினர்.
புதுச்சேரி:

புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் புதுவை அரசுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு சென்டாக் நிர்வாகம் மூலம் மாணவர்களை தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில், முறைகேடுகள் நடந்ததாக புகார் கூறப்பட்டதையடுத்து, கடந்த ஜூன் மாதம் சென்டாக் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த ஆவணங்களின் அடிப்படையில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், சென்னையில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குழு, 3 பிரிவாக பிரிந்து புதுவையில் உள்ள 3 மருத்துவ கல்லூரிகளில் இன்று சோதனை நடத்தினார்கள். கல்லூரிகளின் அலுவலகங்களில் உள்ள ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் சாதனங்களையும் ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று இரவு சோதனையை தொடங்கினர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 778 மாணவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News