செய்திகள்

திருமணம் நடக்காத விரக்தியில் கிணற்றில் குதித்து அக்காள்-தம்பி தற்கொலை

Published On 2017-09-11 09:44 GMT   |   Update On 2017-09-11 09:44 GMT
மணலியில் திருமணம் கைகூடாததால் விரக்தி அடைந்த அக்காள், தம்பி தன் தோட்ட கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

திருவொற்றியூர்:

மணலி சின்னசேக்காடு கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சின்னராஜ். அவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு பஞ்சாட்சரம்(42), நாகேந்திரன் (38) என்ற 2 மகன்களும் வேதநாயகி(40) என்ற மகளும் உள்ளனர். அனைவரும் சின்ன சேக்காட்டில் விவசாயம் செய்து வந்தனர். தங்களது தோட்டத்திலேயே வீடு கட்டி தங்கியிருந்தனர். பஞ்சாட்சரத்துக்கு மட்டும் திருமணமாகி விட்டது.

நாகேந்திரனுக்கும், வேதநாயகிக்கும் திருமணம் நடைபெறவில்லை. பல தடவை முயற்சி செய்தும் திருமணம் கைகூடவில்லை. இதனால் இருவரும் விரக்தியில் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களின் தந்தை சின்னராஜ் இறந்து விட்டார். தாய் கற்பகம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். இதனால் இவர்களுக்கு விரக்தி அதிகமானது. திருமணமாகாமல் இருக்கும் தங்களை எதிர்காலத்தில் கவனிக்க யாரும் இல்லையே என வருத்தம் அடைந்தனர். அதை தொடர்ந்து நேற்று இரவு தங்களது தோட்டத்து கிணற்றில் வேதநாயகியும், நாகேந்திரனும் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதற்கிடையே இன்று காலை தம்பி, தங்கையை காணாமல் அவர்களை பல இடங்களில் பஞ்சாட்சரம் தேடினார்.

அவர்கள் கிடைக்க வில்லை. பின்னர் இருவரும் தோட்டத்து கிணற்றில் பிணமாக மிதப்பது தெரியவந்தது. தகவலறிந்ததும் மணலி போலீசார் அங்கு விரைந்து வந்து விசா ரணை நடத்தினார்கள். தீயணைப்பு படையினர் வந்து பிணங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேத நாயகியும், நாகேந்திரனும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது சொத்துக்காக அவர்களை யாரும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News