செய்திகள்

கல்வியில் மாநில உரிமைகளை பறிக்காதே: கோவை கோர்ட்டில் மாவோயிஸ்டு கோ‌ஷம்

Published On 2017-08-21 12:46 GMT   |   Update On 2017-08-21 12:46 GMT
கோவை கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரான மாவோயிஸ்டு, கல்வியில் மாநில உரிமைகளை பறிக்காதே என்று கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை:

கோவையில் மாவோயிஸ்டு தலைவர் ரூபேஷ் அவரது மனைவி சைனா மற்றும் மாவோயிஸ்டுகள் கண்ணன், வீரமணி, அனுப் ஆகியோரை கியூ பிராஞ்சு போலீசார் கைது செய்தனர்.

இதில் மாவோயிஸ்டு தலைவர் ரூபேஸ் கேரளா திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்தான வழக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக இன்று கேரளாவில் இருந்து மாவோயிஸ்டு தலைவர் ரூபேசை கேரள போலீசாரும், மற்றவர்கள் கோவை மத்திய சிறையில் இருந்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை கோர்ட்டுக்கு ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

அப்போது மாவோயிஸ்டு கண்ணன் பறிக்காதே... பறிக்காதே... கல்வியில் மாநில உரிமைகளை பறிக்காதே என்று கோ‌ஷமிட்டார். அதனைத்தொடர்ந்து மாவோயிஸ்டு தலைவர் ரூபேஷ் அஞ்சமாட்டோம்... அஞ்ச மாட்டோம்... அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம்... இறுதிவரை போராடுவோம். மாவோயிஸ்டு தேச பக்தர்கள் என்று கோ‌ஷம் எழுப்பினார்.

அதனைத்தொடர்ந்து நீதிபதி பொங்கியப்பன் முன்பு மாவோயிஸ்டுகள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Tags:    

Similar News