செய்திகள்

புதுவையில் 31-ந்தேதி விநாயகர் ஊர்வலம்: இந்து மக்கள் கட்சி முடிவு

Published On 2017-08-14 12:13 GMT   |   Update On 2017-08-14 12:14 GMT
புதுச்சேரியில் விநாயகர் சிலைகளை 31-ந்தேதி ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்க இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி:

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவையில் பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட உள்ளன.

இது சம்பந்தமாக இந்து மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் மஞ்சினி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு நிர்வாகிகள் குழுவை தேர்வு செய்வது.

* புதுவையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள், அன்னதானம் செய்வது.

* விநாயகர் சிலைகளை 31-ந்தேதி மதியம் 2 மணிக்கு ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைப்பது.

* விநாயகர் சிலை அமைக்கும் பணிகளில் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் விநாயகர் ஊர்வலத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க கேட்டுக் கொள்வது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News