செய்திகள்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி 3-வது முறையாக பெண்கள் முற்றுகை போராட்டம்

Published On 2017-07-24 12:24 GMT   |   Update On 2017-07-24 12:24 GMT
வெம்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் அந்த கடையை 3-வது முறையாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெம்பாக்கம்:

வெம்பாக்கம் அருகே சின்னஏழாச்சேரி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஏற்கனவே 2 முறை முற்றுகை போராட்டங்கள் நடந்தன. ஆனால் டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து 3-வது முறையாக அந்த பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த செய்யாறு போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன், வெம்பாக்கம் தாசில்தார் பெருமாள், தூசி இன்ஸ்பெக்டர் சாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த மாதம் 11-ந் தேதிக்குள் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் கூறியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதேபோல் தூசி அருகே நரசமங்கலம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் நேற்று புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய மனு கொடுங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News