செய்திகள்

மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-07-19 17:22 GMT   |   Update On 2017-07-19 17:22 GMT
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடலில் இறங்கி நின்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமேசுவரம்:

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடலில் இறங்கி நின்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், நாட்டுப்படகு மீனவர்கள் 3 கடல் மைலுக்கு அப்பால் சென்று மீன் பிடிக்க வேண்டும், விசைப்படகின் குதிரை திறன் 150–லிருந்து 250–ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் மீன்பிடிக்கப்பட்டு, கடல் வளம் முழுமையாக அழிக்கப்படும்.

இந்த சட்டத்திருத்தம் மீனவ கிராமங்களின் குடிசை தொழிலை அழிக்கும் நோக்கத்தில் உள்ளது. ஆகவே நாட்டுப்படகு மீனவர்களுக்கு எதிராக உள்ள தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தை அரசு ரத்து செய்வதோடு, அனைத்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். மேலும் பராம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட திருத்த நகலை கிழித்து கடலில் எறிந்தனர்.

 இதில் மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் செந்தில்வேல், நிர்வாகிகள் கருணாமூர்த்தி, வடகொரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News