செய்திகள்

பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘லேப்-டாப்’ வழங்கப்படுமா?: சட்டசபையில் சேகர்பாபு கேள்வி

Published On 2017-07-18 08:39 GMT   |   Update On 2017-07-18 08:39 GMT
கடந்த ஆண்டு படித்த பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘லேப்-டாப்’ வழங்கப்படுமா? என்று சட்டபேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர்பாபு கேள்வி எழுப்பினார்.
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது சேகர்பாபு (தி.மு.க.) பேசுகையில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு கணினி (லேப்-டாப்) வழங்கப்படவில்லை.

இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து கணினி வகுப்பை தேர்வு செய்த ஏழை-எளிய மாணவர்களுக்கு கணினி இல்லாததால் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு கணினி உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில், ‘உயர்நீதிமன்றத்தில் தடை உள்ளதால் தடை நீக்கப்பட்ட பிறகு வழங்கப்படும்’ என்றார்.
Tags:    

Similar News