செய்திகள்

குமரி மாவட்டத்திற்கு 50 ஆயிரம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வருகை

Published On 2017-06-21 14:41 GMT   |   Update On 2017-06-21 14:41 GMT
குமரி மாவட்டத்திற்கு 50 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் வந்துள்ளன. இந்த கார்கள் அடுத்த வாரம் முதல் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில்  5.50 லட்சம் ரேஷன் கார்டு தாரர்கள் உள்ளனர். தமிழக அரசின் ஸ்மார்ட் ரேஷன்கார்டு திட்டத்தின் கீழ் இவர்களுக்கு படிப்படியாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 2.25 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டன. மீதி உள்ளவர்களில் ஒரு லட்சத்திற்கும் மேற் பட்டவர்களுக்கு புகைப்படம் தெளிவில்லாமல் இருந்தது, ஆதார் எண் இணைக்காதது போன்ற சில காரணங்களுக்காக ரேஷன் கார்டுகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இது போன்றவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த பட்டியலில் இடம் பெற்றவர்கள் உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை இணைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வந்துள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்திற்கு 14 ஆயிரம் கார்டுகளும், விளவங்கோடு, கல்குளம், தோவாளை தாலுகா அலுவலகங்களுக்கு 36 ஆயிரம் ரேஷன் கார்டுகளும் வந்துள்ளன.
இவை அடுத்த வாரம் முதல் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

ரேஷன் கார்டுகள் தயாரான பயனாளிகளுக்கு அவர்களது செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு இருக்கும். இந்த குறுந்தகவலை காண்பித்து அவர்கள் ரேஷன் கடைகளில் புதிய ஸ்மார்ட் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
Tags:    

Similar News