செய்திகள்

சேகர் ரெட்டியின் 50 கிலோ தங்கம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Published On 2017-06-13 08:28 GMT   |   Update On 2017-06-13 08:28 GMT
சேகர்ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.14 கோடி மதிப்புள்ள 50 கிலோ தங்கத்தை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை:

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் சென்னையைச் சேர்ந்த பொதுப்பணித் துறை காண்டிராக்டர் சேகர் ரெட்டியின் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இதில் கணக்கில் காட்டாத ரூ.139 கோடி சொத்து ஆவணங்களும், ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் நோட்டுகளும், தங்க கட்டிகளும் சிக்கியது.

அவரைத் தொடர்ந்து கூட்டாளிகள், மணல் காண்டிராக்டர்கள் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடத்தியது. இதில் கைதான சேகர்ரெட்டி சமிபத்தில் ஜாமீனில் விடுதலையானார்.

இந்த நிலையில் சேகர் ரெட்டி மீதான பண பரிமாற்ற முறைகேடுகளை அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இதில் முதல் கட்டமாக அவரது ரூ.54 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டன.

அடுத்து சேகர்ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.14 கோடி மதிப்புள்ள 50 கிலோ தங்கத்தை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.

Tags:    

Similar News