செய்திகள்

தமிழகத்தில் 2 கோடி டூ வீலர்கள் விற்பனை

Published On 2017-05-29 10:20 GMT   |   Update On 2017-05-29 10:20 GMT
சென்னை நகரின் மக்கள் தொகை சுமார் 80 லட்சம். அதற்கு ஈடாக வாகன பெருக்கமும் அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது 50.73 லட்சம் வாகனங்கள் இயக்கப்படுகிறது.
சென்னை:

சென்னை நகரின் மக்கள் தொகை சுமார் 80 லட்சம். அதற்கு ஈடாக வாகன பெருக்கமும் அதிகரித்துள்ளது.

சென்னையில் தற்போது 50.73 லட்சம் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதில் டூ வீலர்கள் எண்ணிக்கை மட்டும் 40 லட்சத்துக்கு மேல் உள்ளன.

கடந்த ஆண்டு 4.58 லட்சம் வாகனங்கள் இருந்தன. ஒரே ஆண்டில் 2.45 லட்சம் வாகனங்கள் அதிகரித்துள்ளன.

தமிழகத்தில் டூ வீலர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி உள்ளது. 1993-ல் 13.91 லட்சம் டூ வீலர்கள் இருந்தன. 2010-ம் ஆண்டில் ஒரு கோடியாக உயர்ந்தது.

7 ஆண்டுகளில் டூ வீலர்களின் எண்ணிக்கை 2 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

போக்குவரத்துக்கு தேவையான பஸ் வசதி இல்லாதது, டூ வீலர் வாங்க வங்கிகள் தாராளமாக கடன் உதவி வழங்குவது, டூ வீலர் தயாரிப்பு நிறுவனங்களே கடனுதவி வழங்குவது போன்ற காரணங்களால் டூ வீலர் விற்பனை அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News