செய்திகள்

கரூர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 12 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை

Published On 2017-05-23 14:46 GMT   |   Update On 2017-05-23 14:46 GMT
கரூர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பாக 12 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான உத்தரவுகளை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) வழங்கினார்.
கரூர்:

கரூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சூர்யபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, வேலை வாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தர விட்டார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெரு மக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட கலெக்டர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத்தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பாக 12 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான உத்தரவுகளை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) வழங்கினார்.
Tags:    

Similar News