செய்திகள்

12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் - மதிப்பெண்கள் 200-ல் இருந்து 100 ஆக குறைகிறது

Published On 2017-05-22 05:43 GMT   |   Update On 2017-05-22 05:43 GMT
12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 12ம் வகுப்புக்கான மதிப்பெண்கள் பாடவாரியாக 200-ல் இருந்து 100 ஆக குறைகிறது.
சென்னை:

தமிழக அரசு பள்ளி கல்வி முறையில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை தற்போது மேற்கொண்டு வருகின்றது. 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில், 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தேர்வு நேரம் மூன்றில் இருந்து 2.30 மணி நேரமாக குறைகிறது.  

மதிப்பெண்கள் பாடவாரியாக 200-ல் இருந்து 100 மதிப்பெண்களாக குறைகிறது. அதன்படி மொத்த மதிப்பெண் 1200-ல் இருந்து 600 ஆக குறைக்கபடுகிறது.



இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு முறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News