செய்திகள்

பத்தாம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை பின்னுக்கு தள்ளிய மாணவிகள்

Published On 2017-05-19 06:01 GMT   |   Update On 2017-05-19 06:01 GMT
பத்தாம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.2 சதவீதம் ஆகும்.
சென்னை:

8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதம் ஆகும்.

பத்தாம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.2 சதவீதம் ஆகும். மாணவர்கள் 92.5 சதவீதம் ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி பெற்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் பாடத்தில் 9 லட்சத்து 82 ஆயிரத்து 97 பேர் எழுதினர். இதில் 9 லட்சத்து 50 ஆயிரத்து 206 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலம் பாடத்தை 9 லட்சத்து 82 ஆயிரத்து 97 பேர் எழுதியதில் 9 லட்சத்து 59 ஆயிரத்து 245 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

கணித பாடத்தில் 9 லட்சத்து 48 ஆயிரத்து 402 பேரும், அறிவியல் பாடத்தில் 9 லட்சத்து 77 ஆயிரத்து 258 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சமூக அறிவியல் பாடத்தில் 9 லட்சத்து 66 ஆயிரத்து 155 பேர் தேர்ச்சி பெற்றனர். மற்ற பாடங்களை விட சமூக அறிவியல் பாடத்தில் தான் அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். 98.38 சதவீதமாக இது உள்ளது.

Tags:    

Similar News