செய்திகள்

சுரங்க மெட்ரோ ரெயிலில் 2 நாளில் 80 ஆயிரம் பேர் பயணம்

Published On 2017-05-16 04:32 GMT   |   Update On 2017-05-16 04:32 GMT
திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்க பதையில் கடந்த 2 நாட்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோரெயில் திட்டம் 2 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உயர் மட்ட பாதையிலும் சுரங்க பாதையிலும் ரெயில் செல்லும் வகையில் பணிகள் நடந்து வந்தது.

முதற்கட்டமாக உயர்மட்ட பாதையில் கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் ஓடுகிறது.

சுரங்க பாதையில் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் சுரங்க மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

60 அடி ஆழத்தில் ரெயில் செல்வதால் அதன் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அறிய பொது மக்களிடம் ஆர்வம் மிகுதியாக இருந்தது.

முதன் முறையாக சுரங்கபாதையில் ஓடிய மெட்ரோ ரெயிலில் முதல் நாளில் சுமார் 40 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். மக்களிடம் மெட்ரோ ரெயில் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் 7 நாட்களுக்கு 40 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதனாலும், சுரங்க பாதையில் ரெயிலில் பயணம் செய்யும் திகில் அனுபவத்தை பெறவும் மெட்ரோ ரெயிலில் பயணிக்க மக்கள் விரும்புகின்றனர்.

மேலும் குளு, குளு வசதி, விமான நிலையம் போன்ற மெட்ரோ ரெயில் நிலையங்கள் ஆகியவற்றை பார்க்கும் ஆர்வமும் மக்களிடம் உள்ளது.

திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்க பதையில் கடந்த 2 நாட்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான மாநகர பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் பலர் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக திருமங்கலம்- நேரு பூங்கா வரை சுரங்க பாதை ரெயில் சேவையை அதிகளவு பயன்படுத்தி இருக்கிறார்கள்.
Tags:    

Similar News