செய்திகள்

மாரடைப்பால் இறந்த அ.தி.மு.க. தொண்டர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கிய ஓ.பன்னீர்செல்வம்

Published On 2017-04-28 08:59 GMT   |   Update On 2017-04-28 08:59 GMT
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாரடைப்பால் இறந்த அ.தி.மு.க. தொண்டர் வீட்டுக்கு சென்று ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
ராயபுரம்:

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அசோக் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 71). அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தொண்டர். இவர் ஜெயலலிதா மரணம் அடைந்ததில் இருந்து மனம் உடைந்து காணப்பட்டார். அ.தி.மு.க. பிளவு பட்டதால் வேதனை அடைந்த அவர் பின்னர் ஓ.பி.எஸ். ஆதரவாளராக மாறினார்.

இதற்கிடையே ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் அவர் மீண்டும் மனம் உடைந்தார். இதனால் அவர் கடந்த 11-ந்தேதி மாரடைப்பால் இறந்தார்.

இந்த நிலையில் அவரது படத் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதையடுத்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை ராமதாஸ் வீட்டுக்கு வந்தார். அங்கு அவரது படத்தை திறந்து வைத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவரது மனைவி ராஜேஸ்வரியிடம் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

அவருடன் அவைத் தலைவர் மதுசூதனன், ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
Tags:    

Similar News