செய்திகள்

நக்சலைட்டு தாக்குதலில் பலியான 4 தமிழர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் உதவி: முதலமைச்சர் உத்தரவு

Published On 2017-04-25 08:06 GMT   |   Update On 2017-04-25 08:06 GMT
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டு தாக்குதலில் பலியான 4 தமிழர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய நாட்டின் உள்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, திருவாரூர் மாவட்டம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் பத்மநாபன், நீடாமங்கலம் காமராஜர் காலனியைச் சேர்ந்த நாராயணன் மகன்செந்தில்குமார், சேலம் மாவட்டம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி மகன் திருமுருகன், மதுரை மாவட்டம், முத்து நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைஅழகு மகன் அழகுபாண்டி ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.


இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்கள் பத்மநாபன், செந்தில்குமார், திருமுருகன், அழகுபாண்டி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Similar News