செய்திகள்

கட்சி மற்றும் ஆட்சியை வழிநடத்த விரைவில் குழு அமைக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2017-04-18 19:15 GMT   |   Update On 2017-04-18 19:15 GMT
கட்சி மற்றும் ஆட்சியை வழிநடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நேற்று இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனான சந்திப்புக்கு பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் அவர் கூறியதாவது,

ஒரு குடும்பத்தை ஒதுக்கிவைத்து விட்டு, கட்சியையும், ஆட்சியையும் ஒழுங்காக வழிநடத்துவது என்பதே அனைவரின் விருப்பம் என்று கூறினார். மேலும் இவ்வாறு கட்சி மற்றும் ஆட்சியை வழிநடத்த விரைவில் ஒரு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். அந்த குழுவில் அதிமுக-வின் முக்கிய அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த குழு அமைப்பது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் தினகரன் மற்றும் அவரை சார்ந்தவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஒற்றுமையாக செயல்பட்டு இரட்டை இலையை மீட்போம் என்றும் அவர் கூறினார்.

அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்சியை வழிநடத்துவோம். பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவித்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும், இதுவரை அவருடன் எந்தவித பேச்சும் இல்லை.

இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.

Similar News