செய்திகள்

முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் கவர்னர் கிரண்பேடி திடீர் ஆய்வு

Published On 2017-03-26 12:17 GMT   |   Update On 2017-03-26 12:17 GMT
முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கவர்னர் கிரண்பேடி சென்று ஆய்வு செய்தார். போலீசாரிடம் பொதுமக்கள் பாராட்டும் வகையில் கடமையை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவையில் பல்வேறு இடங்களுக்கு சைக்கிளிலேயே சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அதுபோல் இன்று காலை கவர்னர் கிரண்பேடி ராஜ்நிவாசில் இருந்து சைக்கிளில் காலாப்பட்டுக்கு சென்றார்.

சின்ன காலாப்பட்டில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி இருக்கும் சாந்தி இல்லத்துக்கு சென்ற கவர்னர் கிரண்பேடி அங்குள்ளவர்களிடம் மகிழ்ச்சியாக உரையாடினார்.

பின்னர் கவர்னர் மாளிகைக்கு திரும்பும் வழியில் திடீரென முத்தியால் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கிருந்த போலீசாரிடம் பொதுமக்கள் பாராட்டும் வகையில் கடமையை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் ஒவ்வொரு வாரமும் ஒரு போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்யப் போவதாகவும் கவர்னர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் எதிரே உள்ள கோவிலுக்கு கவர்னர் கிரண்பேடி சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த கவர்னர் கிரண்பேடிக்கு கோவில் அர்ச்சகர் மரியாதை செய்தார்.

Similar News