செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்: டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2017-02-26 20:53 GMT   |   Update On 2017-02-26 20:53 GMT
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.
சென்னை: 

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க பிரதமரிடம் வலியுறுத்த தமிழ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். 
  
இதற்காக நேற்று அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.40 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர், இரவு 10.15 மணிக்கு டெல்லியை சென்று அடைந்தார்.



இன்று மாலை 5.45 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு செயலாளர்கள் ஆகியோர் சந்தித்து பேசுகின்றனர். அப்போது நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினை குறித்து பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி திருவிழாவில், 112 அடி உயரம் கொண்ட ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திரமோடி வந்திருந்தார். அப்போது, பிரதமரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார்.

Similar News