செய்திகள்

நெல்லித்தோப்பு தொகுதி மக்களிடம் குறைகளை கேட்ட நாராயணசாமி

Published On 2017-02-24 14:57 GMT   |   Update On 2017-02-24 14:57 GMT
புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

புதுச்சேரி:

நெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு தேர்தலின்போது பல வாக்குறுதிகளையும் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் மக்களை நேரடியாக சந்தித்து இன்று குறைகேட்கும் நிகழ்ச்சியை தொடங்கினார்.

முதல் கட்டமாக நெல்லித்தோப்பு தொகுதி வெண்ணிலாநகர் பகுதியில் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்தார். அப்போது மக்களிடம் இலவச அரிசி கிடைத்ததா? முதியோர் பென்‌ஷன் கிடைத்ததா? என விசாரித்தார்.

அப்பகுதி மக்கள் நாராயணசாமியிடம், பல ஆண்டாக இப்பகுதியில் மனைப்பட்டா வழங்க வில்லை. பட்டா பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டனர். மேலும் கழிவுநீர் சாலையில் ஓடுவதால் அதை சீரமைத்து தர வேண்டும். சமுதாய கூடத்தை புதுப்பித்து தர வேண்டும். அங்கன்வாடிக்கு கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கைகளை கேட்டறிந்த நாராயணசாமி, அவற்றை நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதி அளித்தார். சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் அரசின் டெல்லி பிரதிநிதி ஜான் குமார், தொகுதி தி.மு.க. செயலாளர் நடராஜன், எஸ்.ஆர்.எஸ். நற்பணி இயக்க பொதுச்செயலாளர் பாஸ்கரன், கலெக்டர் சத்யேந்திரசிங், அரசு செயலர் ஜவகர், நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் மற்றும் பொதுப்பணித்துறை, மின்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.

Similar News