செய்திகள்

திருச்சி அருகே ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2017-02-23 13:36 GMT   |   Update On 2017-02-23 13:36 GMT
திருச்சி அருகே ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை மற்றும் ரூ. 9 ஆயிரத்து 500 ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

நெ.1 டோல்கேட்:

திருச்சியை அடுத்த நெ.1டோல்கேட் ஆர்.கே.வி. நகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சாருநிஷா பேகம் (வயது 47). இவர் முசிறியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வெளி மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாலை சாருநிஷாபேகம் பணி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறை ஜன்னலில் இருந்த வளையல், மோதிரம் உள்பட 2 பவுன் நகை மற்றும் ரூ.9ஆயிரத்து500 ஆகியவற்றை மர்மநபர் யாரோ? கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் நெ.1டோல்கேட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும்கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

கடந்த 20-ந் தேதியன்று பிச்சாண்டார்கோவில் மனக்கொல்லை தெருவை சேர்ந்த சரவணம்மாள் (65), என்பவரிடம் அரசு உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி 12 பவுன் தாலிச்சங்கிலி நூதன முறையில் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது போன்று தொடர்ந்து நெ.1டோல்கேட் பகுதியில்கொள்ளை மற்றும் செயின் பறிப்பு சம்பவம் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Similar News