செய்திகள்

எங்களுக்கு கட்-அவுட் வைக்க வேண்டாம்: நாராயணசாமி வேண்டுகோள்

Published On 2017-02-22 10:09 GMT   |   Update On 2017-02-22 10:09 GMT
புதுவை மக்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளில் கட்-அவுட், பேனர் அமைக்க உரிய இடம் தேர்வு செய்யப்படும் என்று நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் கட்-அவுட், பேனர் வைக்க தடை சட்டம் இருந்தாலும் தொடர்ந்து வைக்கப்படுகிறது. கோவில், பள்ளி, நடு ரோடு ஆகிய பகுதிகளில் மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையிலும் கட்அவுட், பேனர் வைக்கின்றனர். இது புதுவையின் அழகை கெடுக்கும்விதத்தில் உள்ளது. இதனால் அரசு வருமானத்தை பெருக்கும் வகையில் ஒரு முடிவு எடுத்துள்ளது.

புதுவை நகரின் அழகை கெடுத்துவிடாத இடங்களில், மக்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளில் கட்-அவுட், பேனர் அமைக்க உரிய இடம் தேர்வு செய்யப்படும்.

எங்களின் புகைப்படங்களோடு கட்-அவுட், பேனர்கள் வைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். அனுமதியில்லாமல் கட்-அவுட் வைத்தால் கடம் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கலெக்டர், நகராட்சி ஆகியவற்றின் மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News