செய்திகள்

சசிகலாவுக்கு தண்டனை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு தீபா பேரவை பாராட்டு

Published On 2017-02-16 10:04 GMT   |   Update On 2017-02-16 10:04 GMT
ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது. இதில் சசிகலாவுக்கு தண்டனை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

செஞ்சி:

செஞ்சி சட்டசபை தொகுதி ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செஞ்சியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. செஞ்சி தொகுதி ஜெ.தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் தணிகாசலம் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் சாமிநாதன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிப்பது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கப்படும் என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்த முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு பாராட்டு தெரிவிப்பது. வருகிற 24-ந்தேதி(வெள்ளிக்கிழமை) ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது.

சசிகலாவுக்கு தண்டனை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது. ஜெயலலிதாவின் சொத்துக்கள் தீபா மற்றும் தீபக்கிற்கு கிடைக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட போவதாக தீபா அறிவித்ததை வரவேற்பது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் ஜெயபால், ஆராமுதன், ஆனந்த், ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News