செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் தக்கலில் விண்ணப்பிக்கலாம்

Published On 2017-02-15 04:45 GMT   |   Update On 2017-02-15 04:45 GMT
10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, தனித் தேர்வர்கள் “சிறப்பு அனுமதி திட்டத்தின்” (தக்கல்) கீழ் ஆன்லைனில் வருகிற 16-ந்தேதி 17-ந்தேதி ஆகிய இரு நாட்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை:

அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்கத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் “சிறப்பு அனுமதி திட்டத்தின்” (தக்கல்) கீழ் ஆன்லைனில் வருகிற 16-ந்தேதி 17-ந்தேதி ஆகிய இரு நாட்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் மட்டுமே நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணத் தொகை ரூ.125 இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.500 மற்றும் ஆன்லைனில் பதிவுக்கட்டணமாக ரூ.50 உள்பட மொத்தம் ரூ.675ஐ சேவை மையங்களில் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News