செய்திகள்

எண்ணெய் படலம் அகற்றும் பணி நாளை காலை முடிவடையும்: திருவள்ளூர் கலெக்டர் தகவல்

Published On 2017-02-03 08:21 GMT   |   Update On 2017-02-03 08:22 GMT
எண்ணூர் கடலில் எண்ணெய் அகற்றும் பணி இன்று மாலை அல்லது நாளை காலையில் முடிவடையும் என திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்:

எண்ணூர் கடலில் எண்ணெய் அகற்றும் பணியை திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலில் கலந்த எண்ணெய் படலம் நேற்று வரை 72 மெட்ரிக் டன் அளவுக்கு அகற்றப்பட்டுள்ளது. நேற்று 760 பேர் இந்தப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று 809 பேர் ஈடுபட்டுள்ளார்கள். மனிதர்கள் மூலம் அகற்றும் பணிதான் கைகொடுக்கிறது. இன்று மாலை அல்லது நாளை காலையில் இந்தப் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதன் பிறகு கடலோர காவல் படை உதவியுடன் பாறைகளில் தேங்கியுள்ள எண்ணெய் படலம் சுத்தம் செய்யப்படும். இதில் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி மீன் வளத்துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News