செய்திகள்

பீட்டாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முறையீடு

Published On 2017-01-24 06:09 GMT   |   Update On 2017-01-24 06:09 GMT
பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடங்கியதில் இருந்தே, ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். தற்போது ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்த வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் இன்று முறையிட்டார். அத்துடன் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் பீட்டா அமைப்பின் ராதா ராஜன், சுப்பிரமணியன் சாமி ஆகியோருக்கு எதிராகவும் அவர் மனு அளித்தார். அதில், ராதா ராஜன், சுப்பிரமணியன் சாமி ஆகிய இருவரும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக பேசி வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால், இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, வழக்காக தொடர்ந்தால் நாளை விசாரிப்பதாக கூறியுள்ளார்.

Similar News