செய்திகள்

ஜெயலலிதா இறப்பு சான்றிதழை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

Published On 2016-12-06 16:50 GMT   |   Update On 2016-12-06 16:50 GMT
உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்த ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை:

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று இரவு 11.30 மணியளவில் பிரிந்தது.

இதயம் செயலிழந்ததை தொடர்ந்து அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, ஜெயலலிதா உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஜெயலலிதாவின் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்கள், பிற மாநில முதலமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்த ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

Similar News