செய்திகள்

சென்னை புறநகரில் மழை - போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 16 புதிய பாலங்கள்

Published On 2016-12-04 06:17 GMT   |   Update On 2016-12-04 06:17 GMT
சென்னை புறநகரில் மழை, போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 16 புதிய பாலங்கள் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில் 8 இடங்களில் பெரிய பாலங்களும், 8 இடங்களில் சிறிய பாலங்களும் அமைகிறது.
சென்னை:

சென்னை புறநகரில் கடந்த ஆண்டு பெய்த பெருமழையின் போது பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. பரங்கிமலை- மேடவாக்கம் மெயின்ரோட்டில் ஈச்சங்காடு ரேடியல் ரோடு சந்திப்பில் கழுத்தளவுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வில்லிவாக்கம் அருந்ததி பாளையம் பகுதியில் தண்ணீர் சூழ்ந்து துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உணவு, தண்ணீர் போன்றவற்றை கொண்டு செல்லவும் முடியவில்லை.

இதே போல் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. அந்த பகுதிகளை அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து 16 இடங்களில் பாலங்கள் கட்ட பரிந்துரை செய்தனர்.

இதில் 8 இடங்களில் பெரிய பாலங்களும், 8 இடங்களில் சிறிய பாலங்களும் அமைகிறது. இந்த பாலங்களை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதில் ஈச்சங்காடு, மேடவாக்கம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் தீவிரமாக நடக்கிறது.

8 பெரியபாலங்கள் அமையும் இடங்கள் வருமாறு:-

பரங்கிமலை யூனியனில் நோக்கம்பாளையம் ரோடு (ரூ.1.10 கோடி), வில்லிவாக்கம் ஏ.வி.ரோடு (2.50 கோடி) பூந்தமல்லி யூனியனில் ராமாபுரம் சாலை (1.75 கோடி), பூண்டி யூனியனில் விதையூர்- கலியனூர் (3.60 கோடி) கடம்பத்தூர் யூனியனில் சாதரை- மேட்டுக்காலனி (4.50 கோடி) குன்றத்தூர் யூனியனில் கெருகம்பாக்கம் (5 கோடி) அச்சரபாக்கத்தில் நெடுங்கல், மீஞ்சூரில் கம்மார் பாளையம் (2.18 கோடி)

சிறு பாலங்கள் அமையும் இடங்கள் வடமேல்பாக்கம், படப்பை நீலமங்கலம், போந்தூர்- வயலூர், சூனாம்பேடு புறவழிச்சாலை, தென்பாக்கம், ராமச்சந்திரபுரம்- கல்லா மெட்டுரோடு, அம்மையார் குப்பம் - மேல் மோசூர் ரோடு.

Similar News