செய்திகள்

புழல் ஜெயிலில் 10 செல்போன்கள் பறிமுதல்

Published On 2016-11-25 09:06 GMT   |   Update On 2016-11-25 09:06 GMT
புழல் ஜெயிலில் ஒரே நாளில் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்குன்றம்:

புழல் ஜெயிலில் கைதிகளிடம் கஞ்சா, செல் போன்கள் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஜெயில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு, நடவடிக்கைகள் எடுத்தும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடிய வில்லை.

இந்த நிலையில் புழல் ஜெயிலில் ஒரே நாளில் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புழல் ஜெயில் 5-வது பிளாக்கில் உள்ள விசாரணை கைதிகள் அறைகளில் ஜெயிலர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்.

அப்போது அறைகளில் மறைத்து வைத்திருந்த செல்போன்கள் சிக்கியது. இதேபோல் மண்ணில் புதைத்து வைத்திருந்த செல் போன்களையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் 10 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது.

இந்த செல்போன்களை பயன்படுத்திய கைதிகள் யார்? அவர்களுக்கு இது எப்படி கிடைத்தது. ஜெயில் அதிகாரிகள் யாரும் இதற்கு உடைந்தையா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து யார்-யாரிடம் பேசப்பட்டு உள்ளது. பேசியவர்கள் யார்? என்ற விவரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.

Similar News