செய்திகள்

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது

Published On 2016-10-24 15:26 GMT   |   Update On 2016-10-28 06:17 GMT
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சென்னை:

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக அவரது இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து முதல்வரின் இலாகாக்களை கூடுதலாக கவனித்துவரும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கடந்த 19-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்த கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் இன்று மீண்டும் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் முக்கிய துறைகளின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

புதிய கல்விக் கொள்கை, உதய் மின் திட்டத்தில் இணைவது, காவிரி விவகாரம் மற்றும்இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

Similar News