செய்திகள்

பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலான மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2016-09-30 17:18 GMT   |   Update On 2016-09-30 17:18 GMT
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை விட்டு விட்டு பெய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் கடுமையாக வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் மாலை 4 மணியளவில் கருமேக கூட்டங்கள் வானில் திரண்டன. குளிர்ச்சியான சூழல் உருவானது. பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை விட்டு விட்டு பெய்தது. அவ்வப்போது மின்னலும் பயங்கரமாக வெட்டியது.

பெரம்பலூரை குளிர்விக்கும் வகையில் பெய்த இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விவசாயப்பணிகளுக்கு உதவிகரமாக வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இதே போல் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அரியலூர் நகரில் சேதமடைந்து காணப்படும் சில சாலைகள் இந்த மழைக்கு சேறும், சகதியுமாக மாறி உருக்குலைந்து காட்சியளிக்கின்றன. எனினும் பரவலாக பெய்த இந்த மழையினால் அரியலூரின் வெப்பம் சற்று தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Similar News