செய்திகள்

சேலத்தில் திருமண மண்டபத்தில் வைத்திருந்த 22 பவுன் நகைகள் மாயம்

Published On 2016-09-06 11:29 GMT   |   Update On 2016-09-06 11:29 GMT
சேலத்தில் திருமண மண்டபத்தில் வைத்திருந்த 22 பவுன் நகைகள் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்களம் பகுதியை சேர்ந்தவர் கண்ணபிரான் (வயது48) இவர் திருவாரூர், திருத்தணி சர்க்கரை கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி எழிலரசி. இவர்கள் இருவரும் கடந்த 3-ந்தேதி சேலம் வந்து அம்மாபேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் கண்ணபிரானின் அண்ணன் மகன் திருமணத்திற்கு கலந்து கொண்டனர்.

அப்போது இரவு பெண் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் எழிலரசி 22 பவுன் நகையை அணிந்து கொண்டு பங்கேற்றார்.

விழா முடிந்ததும் இந்த நகைகளை கழற்றி சூட்கேசில் வைத்து பூட்டினார். பின்னர் இருவரும் திருமண மண்டபத்தில் உள்ள அறையை பூட்டி தூங்கி கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கண்ண பிரானின் அண்ணன் மகன் தூங்குவதற்காக அதே அறையில் இடம் இருக்கிறதா என்று கதவை தட்டிகேட்டுள்ளார். பின்னர் அவர்களிடம் நான் பிறகு வந்து தூங்குவதாக கூறிவிட்டு சென்று விட்டார். இதனால் திறந்து வைத்து விட்டு கண்ணபிரான் தூங்குவதற்கு சென்று விட்டார்.

காலையில் திருமணத்திற்கு செல்வதற்காக எழிலரசி நகைகளை பார்த்தபோது காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த எழிலரசி கணவர் கண்ணபிரானிடம் கூறி உள்ளார்.

இது குறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எழிலரசி நகைகளை கழற்றி வைக்கும் போது யாரோ மர்ம நபர் நோட்டமிட்டு சூட்கேசை திறந்து நகைகளை எடுத்து சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Similar News