செய்திகள்

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் புத்தக கண்காட்சி

Published On 2016-09-02 10:38 GMT   |   Update On 2016-09-02 10:38 GMT
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் புத்தக கண்காட்சி தொடங்கிது. டீன் வனிதாமணி புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மருத்துவ புத்தக கண்காட்சியை டீன் வனிதாமணி தொடங்கி வைத்தார். தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள தேர்வு அறையில் மருத்துவக் கல்லூரி சார்பில் மருத்துவ புத்தக கண்காட்சி தொடங்கியது. டீன் வனிதா மணி புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

மருத்துவ கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம் தொடர்பான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெறும். இந்த ஆண்டிற்கான புத்தக கண் காட்சி 31-ந் தேதி தொடங்கி இன்று (2-ந் தேதி) வரை நடக்கிறது. 1 லட்சம் தலைப்புகளில் 8 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளது. தஞ்சை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் சிவகாமி, மருத்துவ கண்காணிப்பாளர் இளங்கோவன், முன்னாள் முதல்வர் சிங்காரவேலு, மனநல தலைமை மருத்துவர் இளங்கோவன், நூலக செயலாளர் பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஏராளமான மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மருத்துவ புத்தகங்களை வாங்கினர்.

Similar News