செய்திகள்

பெரம்பலூரில் சபாநாயகர் உருவபொம்மையை எரித்து போராட்டம்: தி.மு.க.வினர் 44 பேர் கைது

Published On 2016-08-18 16:31 GMT   |   Update On 2016-08-18 16:31 GMT
பெரம்பலூரில் சபாநாயகர் உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 44 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:

சட்டமன்ற கூட்டத்தில் நமக்கு நாமே பயணம் குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணசேகரன் கருத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளி செய்ததால், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற நடவடிக்கையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதை கண்டித்தும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் தி.மு.க.வினர் பாலக்கரை பகுதியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புறநகர் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அ.தி.மு.க. அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பெரம்பலூர் புறநகர் பஸ் நிலையம் முன்பு சட்டமன்ற சபாநாயகர் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக 44 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News