உள்ளூர் செய்திகள்

கைதான காளியப்பன், மோகனவேல்.

ஏற்காட்டில் வாகனங்களில் டீசல் திருடிய 2 பேர் கைது

Published On 2022-08-10 08:54 GMT   |   Update On 2022-08-10 08:54 GMT
  • ஏற்காடு ஒண்டிகடை பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவது வழக்கம்.
  • அப்படி நிறுத்தப்படும் வாகனங்களில் அடிக்கடி டீசல் திருட்டு போனது.

ஏற்காடு:

சுற்றுலா தலமான ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வருகின்ரன. மேலும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஏற்காட்டிலும் ஏராளமன வாடகை வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்காடு ஒண்டிகடை பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவது வழக்கம்.

அப்படி நிறுத்தப்படும் வாகனங்களில் அடிக்கடி டீசல் திருட்டு போனது. எப்படி திருட்டு நடக்கிறது என தெரியாமல் வாகன் ஓட்டிகள் தவித்தனர். இதுபற்றி போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யபட்டது. இந்நிலையில் நேற்று இரவு ஒண்டிக்கடை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கன ரக வாகனத்தில் மர்ம நபர்கள் டீசல் திருடினர். இதை அப்பகுதியில் வசித்துவரும் சுசிலா என்பவர் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்ளிடம் கூறினார். அப்பகுதி மக்கள் திரண்டு 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை ஏற்காடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள் ஏற்காடு கீரைகாடு கிராமத்தில் வசிக்கும் காளியப்பன் (வயது 23), மோகனவேல் (21) என்பது தெரியவந்தது. இருவரும் அண்ணா பூங்கா அருகே நின்ற லாரியில் 40 லிட்டர் டீசல் திருடியதாக ஒப்புகொண்டனர். 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய வாகனத் தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News