உள்ளூர் செய்திகள்

எடப்பாடி சுடுகாடு அருகே 1200 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-07-25 10:02 GMT   |   Update On 2022-07-25 10:02 GMT
  • எடப்பாடி அருகே உள்ள சின்னப்பம்பட்டி சுடுகாடு அருகில் ரேசன் அரிசி பதுக்கிவைத்திருப்பதாக ரகசியதகவல் கிடைத்தது.
  • இைதயடுத்து கடத்தல் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்தனர்.

சேலம்:

சேலம் உட்கோட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி. விஜயகுமார் மேற்பார்வையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் ரேசன் அரிசி கடத்துப்பவர்களை கண்டறித்து கைது செய்து வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக எடப்பாடி அருகே உள்ள சின்னப்பம்பட்டி சுடுகாடு அருகில் ரேசன் அரிசி பதுக்கி வை த்திருப்பதாக ரகசியதகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்ற போது 50 கிலோ எடை கொண்ட 24 மூட்டைகளில் 1200 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து அங்குள்ள வெள்ளாளபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை இது தொடர்பாக பிடித்து விசாரணை நடத்திய போது ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கள்ள சந்தையில் விற்க பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இைதயடுத்து கடத்தல் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News