உள்ளூர் செய்திகள்

கோவையில் இயல்பை விட 111 சதவீதம் கூடுதல் மழை

Published On 2022-08-08 09:27 GMT   |   Update On 2022-08-08 09:27 GMT
  • தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் வழக்கமாக ஜூன் 1-ந் தேதி தொடங்கும்.
  • கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை 921 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

கோவை:

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் வழக்கமாக ஜூன் 1-ந் தேதி தொடங்கும். ஆனால் நடப்பாண்டு மே மாதம் இறுதியில் தொடங்கி, ஜூன் மாதத்தில் ஓரளவு பொழிந்தது.

ஜூலை மாத இறுதியில் இருந்து, மேற்கு தொடர்ச்சியையொட்டிய மலையோர மாவட்ட ங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 2 மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. சில அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை 921 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இந்த காலகட்டத்தில் பெய்திருக்க வேண்டிய இயல்பான அளவை விட 111 சதவீதம் அதிகமாகும்.

இதே காலகட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 141 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 196 சதவீதம் அதிகம். நீலகிரி மாவட்டத்தில் 1,209 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 142 சதவீதம் அதிகம் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News