உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அவினாசியில் இரு தரப்பினர் மோதல்

Published On 2022-06-21 06:36 GMT   |   Update On 2022-06-21 06:36 GMT
  • உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கூறி தடுப்புகள் வைத்து மறைத்தனர்.
  • ம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீசார் நீண்ட நேரம்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அவினாசி :

அவினாசி அருகே லூர்துபுரம் பகுதியை சேர்ந்த, ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள், பொதுமக்கள் வழக்கமான வழித்தடத்தில் உடலை எடுத்துச்செல்ல முயன்றனர். அப்போது தனிநபர் சிலர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கூறி தடுப்புகள் வைத்து மறைத்தனர்.

இதனால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கூட்டத்தில் யாரோ கல்வீசியதில் மலையப்பன் (வயது 55) என்பவருக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீசார் நீண்ட நேரம்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் இரவு 9 மணியளவில் வழக்கமாக செல்லும் வழித் தடத்தில் உடலை எடுத்துச் சென்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக கல்லறையில் அடக்கம் செய்ய அரை கிலோ மீட்டர் தொலைவில் செல்லக் கூடிய இதே வழித்தடத்தில் தான் சென்று வருகிறோம்.

இதை விட்டு, மாற்றுத் தடத்தில் சென்றால், 4 கிலோ மீட்டர் தொலைவு சென்று தான் அடக்கம் செய்ய முடியும். ஆனால் தற்போது வழக்கமான வழியில் செல்லக் கூடாது என தடுக்கின்றனர். ஆகவே அவர்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த சம்பவத்தால் சேவூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News