செய்திகள்
துரைமுருகன் தொடர்ந்து பின்னடைவு

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திமுக-வின் துரைமுருகன் தொடர்ந்து பின்னடைவு

Published On 2021-05-02 06:46 GMT   |   Update On 2021-05-02 06:55 GMT
வாக்கு எண்ணப்பட்டதில் இருந்தே ஆவடி தொகுதியில் போட்டியிட்டுள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார்.
சென்னை:

தமிழச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஆவடி தொகுதியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் திமுக-வின் துரைமுருகனும் பின்தங்குகிறார்.

வாக்கு எண்ணப்பட்டதில் இருந்தே ஆவடி தொகுதியில் போட்டியிட்டுள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார்.

11.45 நிலவரப்படி 6-வது சுற்றின்பேது திமுக வேட்பாளர் நாசர் 31,160 வாக்குகள் பெற்றுள்ளார். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 19,055 வாக்குகள் பெற்று சுமார் 12 ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார்.

காட்பாடியில் 4-வது சுற்றின்போது அதிமுக வேட்பாளர் ராமு 24,519 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் 18,851 வாக்குகள் பெற்று சுமார் 6 ஆயிரம் வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார்.
Tags:    

Similar News