செய்திகள்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

உடல் வெப்பநிலை 98.6 டிகிரிக்கு மேல் இருந்தால் முகவர்களுக்கு அனுமதியில்லை- சத்யபிரத சாகு

Published On 2021-04-29 07:50 GMT   |   Update On 2021-04-29 13:19 GMT
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 1, 2 தேதிகளில் முழு ஊரடங்கா என்பது பற்றி தமிழக அரசே முடிவெடுக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை:

வாக்கு எண்ணும் பணியை பார்வையிட வரும் தேர்தல் முகவர்கள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 1, 2 தேதிகளில் முழு ஊரடங்கா என்பது பற்றி தமிழக அரசே முடிவெடுக்கும்.

* வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளோம்.

* தேர்தல் வழிமுறைகளை பின்பற்றி மே 2ந்தேதி ஞாயிறன்று வாக்கு எண்ணிக்கை நடக்கும்.



* 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணியில் 16,387 பேர் ஈடுபட உள்ளனர்.

* தொகுதி, அதிகாரிகளை பொறுத்து வாக்கு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கை மாறலாம்.

* 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியில்லை.

* கொரோனா நெகடிவ் சான்றிதழ், ஆர்டிபிசிஆர் சோதனை, தடுப்பூசி சான்று இருந்தாலும் முகவர்களின் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News