செய்திகள்
டாக்டர் அன்புமணி ராமதாஸ் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற காட்சி.

அதிகாரிகள் அரசியல் பார்க்காமல் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Published On 2016-12-28 04:59 GMT   |   Update On 2016-12-28 04:59 GMT
அதிகாரிகள் அரசியல் பார்க்காமல் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
தர்மபுரி:

தர்மபுரி எம்.பி., அன்புமணி ராமதாஸ் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது, அவர் பேசியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் மக்களுக்கு குடிநீர், சாலை, கல்வி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. தர்மபுரி மாவட்டத்தில், ஏராளமான முதியோர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்கள் மசக்களுக்கு சென்று சேர வேண்டும். அரசியல்வாதிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுவார்கள். அதனால், அதிகாரிகள் தைரியத்துடன், அரசியல் பார்க்காமல் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். அதிகாரிகள் மக்களை தேடி கிராமம் கிராமமாக செல்ல வேண்டும்.

மேலும், முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு பஞ்சாயத்து வாரியாக முகாம் அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். பொது மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு காண வேண்டும். பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையில், 32 டி.எம்.சி., உபரி நீர் வீணாக வெளியேறி தென்பெண்ணையாற்றில் கலந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், தாசில்தார் மணி, தனி தாசில்தார் மாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், வேலுசாமி, அரசாங்கம், அமானுல்லா, இமயவர்மன், சாந்தமூர்த்தி, வெங்கடேசன், சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News