லைஃப்ஸ்டைல்

கணவர் மனைவியை ஏமாற்றுவதற்கான காரணங்கள்

Published On 2018-06-27 08:47 GMT   |   Update On 2018-06-27 08:47 GMT
கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது சில காரணங்களால் அவர்களின் உறவில் விரிசல் ஏற்படும்.
கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது சில காரணங்களால் அவர்களின் உறவில் விரிசல் ஏற்படும். இதற்கு ஆண்கள் மட்டும் காரணமாக இருப்பது என்பது கிடையாது. இதுபோல மனைவியை ஏமாற்றும் கணவனை கண்டுபிடிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

* தொடர் பிரச்சனைகளால் இருவருக்கிடையில் ஏற்படும் மனக்கசப்பு, குழப்பம் போன்றவற்றால் நிம்மதியில்லாமல் போகும். இந்நேரங்களில் ஆண்கள் இதைவிட்டு விலக நினைப்பார்கள். மனைவியுடனான் நெருக்கத்தை குறைத்து மற்றவர்கள் மேல் அக்கரை அதிகமாகும்.

* திருமண வாழ்க்கை சில காலகட்டத்தில் சலிப்பை உண்டாக்கும். இதனால் மற்ற பெண்களின் ஈர்ப்பை அவர்கள் அடைய நினைப்பார்கள்.

* தாம்பத்யத்தில் முக்கியமானது உடலுறவு சம்பந்தமான பிரச்சனை. மனைவியுடனான அனுபவம் குறைந்து காணப்பட்டால் வேற எண்ணங்கள் தோன்றி ஏமாற்றும் நிலையை தேடுவார்கள்.

* காலம் செல்ல செல்ல திருமணமான புதிதில் இருந்த பாசம், அன்பு, அக்கரை குறைய ஏற்படும். இதனால் வேறொரு பெண்ணை தேடுவார்கள்

* குழந்தைகள், வேலைபளு போன்றவற்றால் மனைவிகளை மறந்து இடைவெளியை உண்டாக்குவார்கள். இதன்மூலம் அலுவலகத்திலோ வேறு எங்கேயோ நெருக்கமுள்ள பெண்களின் உறவால் மயங்கிவிடுவார்கள்.

* கணவர்கள் செய்யும் சிலவற்றை மனைவி பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி, அது தாமதமாகி வேறொருவர் பாராட்டினால் மனைவி மேல் இருக்கும் உறவில் பிளவு ஏற்படும். அதை கொடுக்கும் பெண்ணின் பக்கம் சாய்ந்துவிடுகிறார்கள்.

* ஆண்கள் மனதில் ஏற்படும் எதிர்பார்ப்பை மனைவிகள் புரிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்யும் போது, அது அவர்களுக்கு இடையே நெருக்கம் குறைந்து, ஏமாற்ற செய்கிறது.
Tags:    

Similar News