லைஃப்ஸ்டைல்

அத்திப்பழத்தை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம்

Published On 2018-12-06 06:44 GMT   |   Update On 2018-12-06 06:44 GMT
அத்தியை அப்படியே சாப்பிட்டாலும் சரி, இல்லை முகத்தில் அல்லது தலையில் பயன்படுத்தினாலும் சரி நன்மைகள் ஏராளம். அத்திப்பழத்தை எப்படி அழகிற்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
பல பழங்களை நாம் சாப்பிட்டாலும், அத்தி பழத்தை சாப்பிடுவது போன்ற ஆரோக்கியம் எதிலும் கிடைக்காது. ஏனெனில், இதில் அந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ளதாம். நீங்கள் அத்தியை அப்படியே சாப்பிட்டாலும் சரி, இல்லை முகத்தில் அல்லது தலையில் பயன்படுத்தினாலும் சரி நன்மைகள் ஏராளம்.

* முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும். இதனை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தாலே போதும், பருக்கள் மறைந்து விடும்.

தேவையான பொருட்கள் :

அத்தி பழம் - 1
தேன் - 1 ஸ்பூன்

செய்முறை :

முதலில் அத்திப்பழத்தை அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அரைத்த அத்திப்பழ கூழுடன் தேனை கலந்து முகத்தில் தடவி கொள்ளவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் இதனை கழுவி கொள்ளலாம். அத்திப்பழத்தின் அற்புத குணம் உங்கள் முகத்தை பருக்கள் இல்லாமல் மாற்றும்.

* அத்திபழத்தை கொண்டு எப்படி முக பொலிவை பெறுவது என்பதை இந்த குறிப்பில் தெரிந்து கொள்வோம். அதற்கு தேவையானவை..

தேவையான பொருட்கள்

அத்திப்பழம் - 1
யோகர்ட் - 2 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்

செய்முறை :

முதலில் அத்திப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். பிறகு யோகர்ட் மற்றும் தேனை ஒன்றாக கலக்கி கொள்ளவும். இந்த கலவையை அத்திப்பழத்துடன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அத்தியில் உள்ள வைட்டமின் சி முகத்தை மினுமினுப்பாக்கும். 
Tags:    

Similar News