லைஃப்ஸ்டைல்
சேமியா அடை

மாலை நேர சிற்றுண்டி சேமியா அடை

Published On 2020-08-15 10:28 GMT   |   Update On 2020-08-15 10:28 GMT
சேமியாவில் பாயாசம், உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சேமியாவை வைத்து சூப்பரான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வறுத்த சேமியா - ஒரு கப்,
கெட்டி தயிர் - ஒரு கப்,
அரிசிமாவு - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 1,
மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு.



செய்முறை:

சேமியாவை தயிரில் (தண்ணீர் விடாமல்) 20 நிமிடம் ஊறவிடவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு சிறிது வதக்கி ஊறும் சேமியாவில் சேர்த்துக் கொள்ளவும்.

இதில் மிளகாய்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்தக் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து, தோசைக்கல்லில் சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தும் மெதுவாக பரப்பி, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

அவ்வளவுதான்.. சுவையான சேமியா அடை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News