லைஃப்ஸ்டைல்

சுவையான திருச்சி ஸ்டைல் மட்டன் பிரியாணி

Published On 2018-02-15 09:38 GMT   |   Update On 2018-02-15 09:38 GMT
விதவிதமான பிரியாணியை சாப்பிட அனைவருக்கும் ஆசை இருக்கும். இந்த குறையை போக்க இன்று திருச்சி ஸ்டைல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மட்டன் - அரை கிலோ
அரிசி - 3 கப் [ பாஸ்மதி அரசி]
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
[பாட்டி மசாலா] தனி மிளகாய் தூள் - 1 /2 ஸ்பூன்
[பாட்டி மசாலா] கரம் மசாலா தூள் - 1 /2 ஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
பூண்டு, விழுது - சிறிதளவு
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
தேங்காய் - 1/2 மூடி
எலுமிச்சை பழம் - பாதி
எண்ணெய், நெய் - தேவையான அளவு
கிராம்பு - 3
பட்டை - 2
பிரியாணி இலை - 2
ஏலக்காய் - 5
முந்திரி பருப்பு - 5



செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மட்டனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

பச்சை மிளகாயை நீள வாட்டில் அரிந்து கொள்ளவும்.

தேங்காயுடன் கசகசாவையும் அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.

பாஸ்மதி அரிசி நன்றாக கழுவி முக்கால் பாகம் வேக வைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, முந்திரி பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாயை சேர்த்து குழைய வேக விடவும்.

அடுத்து அதில் [பாட்டி மசாலா] மிளகாய் தூள் மற்றும் [பாட்டி மசாலா] கரம் மசாலா தூளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு 2 கப் தண்ணீருடன் மட்டனையும் சேர்த்து 30 நிமிடம் வேக வைத்து மட்டன் மசாலாவை ரெடி செய்து வைத்து கொள்ளவும்.

கடைசியில் முக்கால் பாகம் வெந்த சாதத்துடன் வேக வைத்த மட்டன் மசாலா கலவையுடன் சேர்த்து அடுப்பை சிம் இல் வைத்து 10 நிமிடம் தம் போடவும்.

கடைசியாக சிறிது கொத்தமல்லி தழை, நெய் சேர்த்து 2 முறை கிளறி விட்டால்.. தயாராகிவிட்டது சுவையான திருச்சி ஸ்டைல் மட்டன் பிரியாணி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News