லைஃப்ஸ்டைல்

மாலை நேர டிபன் மீல்மேக்கர் உப்புமா

Published On 2018-02-12 09:34 GMT   |   Update On 2018-02-12 09:34 GMT
குழந்தைகளுக்கு விருப்பமான மீல்மேக்கரில் உப்புமா செய்தால் சூப்பராக இருக்கும். இன்று மீல்மேக்கர் வைத்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மீல்மேக்கர் - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 2
தக்காளி - 2
[பாட்டி மசாலா] கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
[பாட்டி மசாலா] மிளகு தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கடுகு - சிறிதளவு.



செய்முறை :

உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் மீல்மேக்கரை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும். வெந்த மீல்மேக்கரை உதிர்த்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் உருளைக்கிழங்கு, மீல்மேக்கரை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, [பாட்டி மசாலா] கரம்மசாலா தூள், [பாட்டி மசாலா] மிளகு தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

அனைத்து நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான மீல்மேக்கர் உப்புமா ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News