லைஃப்ஸ்டைல்

அருமையான ஸ்நாக்ஸ் ஜவ்வரிசி போண்டா

Published On 2018-01-25 08:09 GMT   |   Update On 2018-01-25 08:09 GMT
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ஜவ்வரிசியில் சூடாக போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி - 1
ரவை - அரை கப்
அரிசி மாவு - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 1
புளித்த தயிர் - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை : 

வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரை கப் மாவு ஜவ்வரிசியை காலையில் ஊறவிட்டால் மாலையில் போண்டா செய்யலாம். 

போண்டா செய்ய ஒரு மணி நேரம் முன் ஒன்றரை கப் ரவையை புளித்த தயிரில் ஊறவிடவும். 

ரவை ஊறியதும் அதில் ஜவ்வரிசியை தண்ணீரை பிழிந்து சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், அரிசி மாவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை சேர்த்து உப்பு போட்டு போண்டா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவு சற்று நீர்த்து போனால் அரிசி மாவு சேர்த்து கொள்ளலாம். அரிசி மாவு சேர்ப்பதால் போண்டா மொறுமொறு என்று இருக்கும்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவு போண்டாவாக பிடித்து போட்டு பொரித்து எடுக்கவும்.

சூப்பரான ஜவ்வரிசி போண்டா ரெடி.

இது சுடச் சுட தக்காளி சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். 

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News