லைஃப்ஸ்டைல்

பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்

Published On 2018-01-12 09:22 GMT   |   Update On 2018-01-12 09:22 GMT
அவலில் பொங்கல் செய்தால் அருமையாக இருக்கும். இன்று அவலை வைத்து எளிய முறையில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

அவல் - ஒரு கப்
வெல்லம் - முக்கால் கப்
குங்குமப்பூ - சிறிது
பால் - 1/2 கப்
நெய் - 1/4 கப்
ஏலக்காய் - 1
முந்திரி - 10
பச்சைப் பயறு - 1/4 கப்
திராட்சை - 10



செய்முறை : 

முதலில் பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும் வரை வறுத்துக்கொள்ளவும்.

பச்சைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும் அளவிற்கு தண்ணீர் விட்டு மலர வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு பாலும், தண்ணீருமாகக் கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும்.

பின்பு கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டித்தட்டாமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில் மூடி வேகவைக்கவும். அவல் சீக்கிரமே வெந்துவிடும். 
சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்கலில் சேர்த்துவிடவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் இறக்கி வடிகட்டி பொங்கலில் கொட்டிக் கிளறவும்.

ஏலக்காயைத் தட்டிப் போடவும்.

மற்றொரு வாணலில் நெய் விட்டு முந்திரி, திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும் பரிமாறவும்.

அருமையான அவல் சர்க்கரைப் பொங்கல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News