search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்க்கரை பொங்கல்"

    • கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கல்.
    • பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக செய்யலாம்.

    பொதுவாகவே பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலும் வெண்பொங்கலும் செய்வது வழக்கம் தான். என்னதான் வீட்டில் பொங்கல் செய்தாலும் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலின் சுவைக்கு பல ரசிகர்கள் உண்டு. அதனால் இந்த பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக இன்னும் சுவையான கோவில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலை வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள். ரசித்து சாப்பிடுவார்கள்! அப்படி கோவிலில் கொடுக்கப்படும் பொங்கலில் என்ன வித்தியாசமாக சேர்க்கிறார்கள்... நாம் சேர்க்கும் எவற்றை சேர்ப்பதில்லை என்ற ரெசிபி உங்களுக்காக...

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - 1 கப்

    வெல்லம் - 1/4 கிலோ

    தேங்காய் - 4 முதல் 5 பத்தை

    முந்திரி - தேவைக்கேற்ப

    உலர்ந்த திராட்சை - தேவைக்கேற்ப

    சுத்தமான பசு நெய் - 7 முதல் 8 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

    பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை

    செய்முறை:

    முதலில் அரிசியை நன்றாக கழுவிய பின்னர் நிறைய தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக குழைந்து வெந்த பின்னர் சாதத்தை வடிக்காமல் சல்லடை பாத்திரத்தில் போட்டு வேகவைத்த தண்ணீரை இறுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் சாதத்தை அதே சட்டியில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து கரண்டியால் மசித்து விட வேண்டும்.

    அதன்பின்னர் வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி அதை குழைந்த சாதத்தில் சேர்த்து நன்றாக கலக்குங்கள். சாதமும் வெல்லமும் நன்றாக கலக்கும் வரை நன்றாக கிளறிக் கொள்ளுங்கள். நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இரக்கலாம்.

    பொங்கலை தாளிக்க வேரு ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி உருகியதும் முந்திரி, உலர் திராட்சையை நெய்யில் நன்றாக வறுத்து பொன்நிறமானதும் அதை பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறுங்கள். அதன்பின் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறுங்கள்.

    இறுதியாக கோவில் பிரசாதத்தில் மட்டும் சேர்க்கப் படும் பச்சை கற்பூரத்தை ஒரு சிட்டிகை மட்டும் சேர்த்து கிளறினால் கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல் தயார்.!

    குறிப்பு : கோவில் பிரசாதமாக சர்க்கரை பொங்கல் செய்யும் போது பாசிப்பருப்பு சேர்க்க மாட்டார்கள். கட்டாயம் சேர்க்க வேண்டுமென விரும்பினால் தாராளமாக நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் தற்போது கடைகளில் கிடைக்கும் வெல்லம் உப்பு சேர்த்துதான் தயாரிக்கப்படுகிறது. சுத்தமான வெல்லம் கிடைக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் சாதம் வடிக்கும் போதே ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.. மேலும் சர்க்கரை பால் பொங்கலாக செய்ய விரும்புவர்கள் அரிசியை வெந்தது வடித்ததும் 1 கப் காய்ச்சிய பால் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.!

    • இந்துக்கள் சர்க்கரை பொங்கலை சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • பாத்தியா ஓதி வழிபாடு நடத்தப்பட்ட பின்பு அது அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற்கு ட்பட்ட கொடிக்கால்பாளை யத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நூற்றாண்டுகள் பழமையான மத நல்லிணக்க  பாச்சோறு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான பாச்சோற்று திருவிழா கடந்த நவம்பர் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த பாச்சோற்று திருவிழா மொத்தம் 9 நாட்கள் நடைபெறும்.

    இந்த திருவிழா தொடங்கிய நாள் முதல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றும் பொருட்டு தங்களது வீடுகளில் சர்க்கரை பொங்கல் சமைத்து அதனை எடுத்து வந்து பள்ளிவாசலில் வைத்து பாத்தியா ஓதி வழிபாடு செய்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து ஹஜ்ரத் செய்யதினா செய்யது மஃஸூம் சாஹிப் ஒலியுல்லாஹ் நினைவிடத்தில் சந்தனம் பூசி வழிபாடு நடத்தப்பட்டது.

    இந்த திருவிழாவின் இறுதி நாளும் ஹஜ்ரத் செய்யதினா செய்யது மஃஸூம் சாஹிப் ஒலியுல்லாஹ் வின் நாளுமான நேற்று முக்கிய நிகழ்வான பாச்சோறு திருவிழா நடைபெற்றது.

    இதில் திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது வீட்டில் சர்க்ரைப் பொங்கலை சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இவ்வாறு நூற்றுக்க ணக்கான சட்டிகளில் சர்க்கரை பொங்கல் சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் கொடுத்தனர். அந்த அனைத்து பாத்திரங்களிலிருந்தும் சர்க்கரை பொங்கல் எடுக்கப்பட்டு மொத்தமாக ஒரு பெரிய சட்டியில் இடப்பட்டு பாத்தியா ஓதி வழிபாடு நடத்தப்பட்ட பின்பு அது அனைத்து தரப்பு மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

    இந்து முஸ்லீம் என அனைத்து தரப்பு மக்களும் மதப் பாகுபாடு இன்றி கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை இங்கு செலுத்தினர்.

    இந்த திருவிழாவில் செவ்வாடை அணிந்து ஆதி பராசக்தி பக்தர் ஒருவர் தலையில் சக்கரை பொங்கல் அடங்கிய பாத்திரத்தை எடுத்து வந்து வழிபாடு நடத்தியது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

    • பாரம்பரிய உணவாக இடம் பிடிப்பது சர்க்கரைப் பொங்கல்.
    • சர்க்கரைப் பொங்கலில் சத்துக்களும் நிறைந்துள்ளன.

    தென்னிந்த பண்டிகைகளில் பாரம்பரிய உணவாக இடம் பிடிப்பது சர்க்கரைப் பொங்கல். இது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம். நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சுவையைப் போலவே சர்க்கரைப் பொங்கலில் சத்துக்களும் நிறைந்துள்ளன.

    சர்க்கரைப் பொங்கலில் இருக்கும் சத்துக்கள், தசைகளுக்கு ஆற்றலை அளித்து அவற்றை வலிமைப்படுத்தும். ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். சர்க்கரை பொங்கலில் சேர்க்கப்படும் உணவுப்பொருட்களில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

    குளூட்டன் இல்லாத பச்சரிசி, ஒவ்வாமை ஏற்படுத்தாத உணவுப்பொருளாகும். இதில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள் சிறு மூளையின் இயக்கத்தை தூண்டக்கூடியவை. அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.

    பச்சரிசியில் கால்சியம், மெக்னீசியம். பாஸ்பரஸ், பொட்டாசியம். இரும்புச்சத்து, செலினியம், வைட்டமின் ஏ. பி ஆகிய சத்துக்கள் உள்ளன. பாசிப்பருப்பில், புரதச்சத்து அதிக அளவில் உள்ளது, இது உடலை குளிர்ச்சிப்படுத்தும், இதில் இருக்கும் பொட்டாசியம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மேலும் மெக்னீசியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற சத்துக்களும் பாசிப்பருப்பில் உள்ளது. இவை அனைத்தும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

    இனிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் வெல்லத்தில் வைட்மின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. அவை சருமம் உள்பட உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஊட்டமளிக்கும். வெல்லம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். இதில் இருக்கும் இரும்புச்சத்து பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை போக்கும்.

    சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கப்படும் நெய்யில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு உள்ளது. வைட்டமின் ஏ. ஈ போன்ற சத்துக்களும் அடங்கி உள்ளன. இவை அனைத்தும் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கும். முந்திரி, திராட்சை போன்றவற்றில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியவை.

    பண்டிகை தினத்தில் விரதத்தை முடித்தவர்கள் சர்க்கரை பொங்கலை சாப்பிடும்போது அவர்களுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும். சர்க்கரைப் பொங்கலில் வாசத்திற்காக சேர்க்கப்படும் ஏலக்காயில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

    அதனால் தான் ஒவ்வொரு விசேஷத் திலும் சர்க்கரைப் பொங்கல் பிரதான உணவாக இருக்கிறது. கோவில்களில் நெய்வேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

    • சர்க்கரை பொங்கலுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
    • பெருமாளுக்கு அக்கார அடிசல் செய்து வணங்கினால் என்ன கேட்டாலும் கிடைக்கும்.

    ''மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணையும், நூறு அண்டா அக்காரசஅடிசலும் உனக்கு நிவேதனமாகத் தருகிறேன்...'' திருமாலிருஞ்சோலை அழகரிடம் ஆண்டாள் இப்படி வேண்டிக் கொண்டாள். அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.

    ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரஅடிசலும் பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...? சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் ராமானுஜருக்கு வந்தது. உடனே அந்த மகான் என்ன செய்தார் தெரியுமா?

    நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்கார அடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதனை செய்தார். ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார். அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள்.

    இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உத்சவமாக கொண்டாடுகிறார்கள். அன்று அக்காரஅடிசல் பிரசாதமும் உண்டு.

    அக்காரை என்றால் சர்க்கரை. அடிசல் என்பது குழைய வெந்த சாதம். பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல இருந்தாலும் சர்க்கரை பொங்கலுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

    புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்கார அடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.

    ×