லைஃப்ஸ்டைல்

சப்பாத்திக்கு அருமையான உருளைக்கிழங்கு முட்டைக்கறி

Published On 2017-10-21 09:36 GMT   |   Update On 2017-10-21 09:36 GMT
சப்பாத்தி, நாண், தோசை, இட்லி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் உருளைக்கிழங்கு முட்டைக்கறி. இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முட்டை - 6
உருளைக்கிழங்கு - 100 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
தேங்காய் - கால் மூடி
எலுமிச்சம் பழம் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 25 கிராம்
பச்சைமிளகாய் - 8
கடுகு - அரை தேக்கரண்டி
நெய் - 25 கிராம்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - 4 கொத்து.



செய்முறை :

முட்டையை வேக வைத்து தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு, முந்திரி போட்டு சிவந்ததும், வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த தேங்காய் விழுது சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தேங்காய் கொதித்து பச்சை வாடை போனவுடன் முட்டை, உருளைக்கிழங்கு,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கடைசியாக கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு முட்டைக்கறி தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News